(ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவதையே கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். அதற்காக கட்சியின் தலைமைத்துவம் செயற்பட்டு வருகிறதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொன்சேகாவும் மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியுமெனின் கட்சியின் பிரதித் தலைவருக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாதா என கேள்வி எழுப்பியுள்ள அவர், சஜித் பிரேமதாஸ களமிறங்கினால் வெற்றிப் பெறுவார் என்பதை நாம் நிருபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.