பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சியில் போட்டியிட்ட வேகப்பந்து வீச்சாளரான மஷ்ரபே மொடாசா பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.
அது, அவர் போட்டியிட்ட வாக்குத் தௌதியில் 96% வீத ஆதரவினாலேயே ஆகும்.
பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மஷ்ரபே மொடாசா இன்னும் தேசிய அணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இவ்வாறான செயல்திறன் மிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.