மஹிந்த காலத்தில் ஒரே ஒரு அஸ்வர் பாராளுமன்றில் இருந்ததாகவும் முஸ்லிம்கள் கொண்டுவந்த நல்லாட்சி அரசில் 21 அஸ்வர்கள் பாராளுமன்றில் இருப்பதாகவும் ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ என் எப் மிப்ளால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மக்காவில் இருக்கும் சமாதானத்துக்கான ஐக்கிய முன்னணியின் தலைவர் ஐ என் எப் மிப்ளால் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
தற்போதைய இலங்கை அரசானது முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை மிகவும் பொடு போக்காகவே கையாண்டு வருகிறது. இதன் பிற்பாடும் அதனை முஸ்லிம்களாகிய நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.
அல்லாஹ்வை மிகவும் கேவலமான முறையில் விமர்சித்தவர்கள் இன்று அரச தலைவர்களுக்கு ஒப்பாக நீதி மன்றங்களால் நடத்தப்படும் அளவுக்கு நிலமை மோசம் அடைந்துள்ளது.
தேங்காய் திருடியவர்களுக்கு பிணை வழங்க ஆயிரம் கட்டுப்பாடுகளை போடும் இந்த நாட்டு சட்டம் நான்கு பொலிஸ் குழுக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த காவி உடையில் இருக்கும் ஒரு பயங்கரவாதிக்கு ஒரு சில மணி பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பெரும்பான்மை இனத்தவர்கள் கூட கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்கள் ஆனால் எமது முஸ்லிம் எம்பிக்களை அனைவரும் பதவிகளுக்கு சோரம் போய் மௌனித்து உள்ளார்கள்.
இவர்களை இனியும் நம்பி பிரயோசனம் இல்லை நாம் மக்கள் வீதிக்கு இறங்கி அலுத்கமைக்கு நீதியையும் இழப்பையும் பெற்றுக்கொடுப்பதோடு இந்த அரசாங்கத்தில் எமக்கு இழைக்கப்பட்டுள்ள வில்பத்து வர்த்தமானி, மாயக்கல்லி காணி அபகரிப்பு உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக நாம் போராட தயாராக வேண்டும் என ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ என் எப் மிப்ளால் இலங்கை முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஞானசார தேரர் விடயத்தில் எமக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காவிட்டாலும் இறைவனிடன் இதற்கான நீதி கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.