(“எங்கள் நாட்டில் சட்டவிரோத இஸ்ரேலிற்கு இடமில்லை ” மகாதீர் முஹம்மது)
பலன்தீன் நாடு ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் உறவு குறித்து மலேசியா பிரதமர் மகாதீர் முகமதுவின் வெளிப்படுத்தல் சர்வதேச அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது..
மலேசியா நாட்டில் வைத்து வருகிற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை சர்வதேச பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுவுள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியலில் சட்டவிரோத இஸ்ரேலின் வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது மகாதீர் முகமது கவனத்திற்கு வந்தவுடன் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்..
”பாலஸ்தீனத்தை உறுதியாக ஆதரிக்கும் நாடு மலேசியா. இஸ்ரேலை தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக மலேசியா இதுவரை அங்கீகரிக்காத பட்சத்தில் இஸ்ரேல் வீரர்கள் மலேசியா நாட்டில் விளையாட அனுமதிக்க முடியாது. எங்கள் ஆட்சேபனையை மீறி போட்டியில் பங்கேற்க வருகை தரும் இஸ்ரேலிய வீரர்கள் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவார்கள்..
இஸ்ரேல் வீரர்கள் தொடர்பாக சர்வதேச பாராலிம்பிக்ஸ் சம்மேளனத்தின் எந்தவொரு சமரசத்திற்கும் மலேசியா உடன்படாது. வேண்டுமானால் போட்டிகளை நடத்த மலேசியாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்… ” என்று 93 வயது பிரதமர் மகாதீர் முகமது சூழுரைத்துள்ளார்..