• Sun. Oct 12th, 2025

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணி அப்டேட்…

Byadmin

Jan 16, 2019

(கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணி அப்டேட்…)

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது. துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

துறைமுக  நகரத்திற்காக கடலை நிரப்பும் நடவடிக்கையின் காரணமாக, சில பிரதேசங்களில் கடற்கரைகள் அரிப்புக்குள்ளாவதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க இதன் போது தெரிவித்த வேளை   துறைமுக நகரத்தின் நிர்மானப்பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் ஊடாகவே குறித்த பகுதிகளை புனரமைக்க தீர்மானித்துள்ளதாக சீன தூதுவர்  Cheng Xueyunan பதில் அளித்துள்ளார்.

நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *