(ஜாஎல பொலித்தீன் தொழிற்சாலையில் தீ விபத்து…)
ஜாஎல, ஏகல பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், தீயினால் நிறுவனத்தின் இயந்திர உபகரணங்கள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மின் ஒழுக்கு காரணமாகவே தீ சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.