(மாகாணசபை தேர்தலை எப்போது நடத்துவது…. இன்று ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்)
மாகாணசபை தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்பட
உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களையும் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன் ஒரே நாளில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அமைச்சரவையில் கடந்த வாரம் இந்த யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி குறித்த ஜனாதிபதியின் யோசனைத் திட்டம் குறித்து இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டுமென ஜனாதிபதி தனது யோசனையில் முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.