(இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் முகம்மத் ஷிராஸ்)
இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் விளையாட, மடவளை வீரர் முகம்மத் ஷிராஸ் உள்வாங்கப்பட்டார் . வாழ்த்துக்கள்.
கிரிக்கட் ரசிகர்களால் சமூக வலைகளில் பேசப்பட்டு வந்த இவரின் தேசிய கிரிக்கட் அணியில் இணைத்து கொள்ளபட்ட இத்தகவல் சற்றுமுன்னர் உத்தியோகபூர்வமாக இலங்கை கிரிக்கட் சபையால் உறுதி செய்யபட்டது.
இலங்கை அணி எதிர்வரும் வாரம் தென்னாபிரிக்க விஜயம் செய்து டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற உள்ளது. இந்த போட்டிகளில் விளையாடவே மடவளை வீரர் முகம்மத் ஷிராஸ் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் இலங்கை கிரிக்கட் சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளரான இவர் சிறப்பான துடுப்பாட்ட வீரர் என்பதுடன் தற்போது BRC முன்னணி கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வருவதுடன் இலங்கை A அணியில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி பந்து வீச்சில் சாத்திதும் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
