• Sat. Oct 11th, 2025

கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்

Byadmin

Jan 3, 2022

(கைகளை இழந்தும் மனம், தளராத சபா குல்)

பாகிஸ்தானின் கைபர் பகுதியைச் சேர்ந்தவர் சபா குல். 2005 ஆம் ஆண்டு தனது சக தோழிகளோடு விளையாடிக் கொண்டு இருந்தபோது சக்தி வாய்ந்த மின்சார கம்பிகள் இவர் மேல் விழ உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது. இதில் இவரது கைகள் இரண்டும் செயலிழந்தால் அதனை மருத்துவர்கள் அகற்றி விட்டனர். கைகளை இழந்த இவருக்கு வாழ்வே சூன்யமாகி போனது. ஆனாலும் மனம் தளரவில்லை. கடுமையாக உடல் பயிற்சிகளை மேற்கொண்டார். தனது கால்களாலேயே தனது அனைத்து தேவைகளையும் செய்து கொள்ள பழகிக் கொண்டார். தற்போது பெஷாவர் நகரில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
‘இரு கைகளையும் இழந்த நிலையில் வாழ்வை கழிப்பது சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் வாழ்வில் யாருக்கும் சிரமமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்தேன். இன்று எனது கால்களாலேயே எழுதுகிறேன்: எனது துணிகளை நானே துவைத்துக் கொள்கிறேன்: எனது துணிகளை நானே சலவை செய்து கொள்கிறேன்: கல்லூரிக்கும் செல்கிறேன்: வாழ்வை எனது உடல் அமைப்புக்கு ஏற்ப மாற்றிக் கொண்டேன். இன்று வாழ்வு இனிமையாக செல்கிறது. அரசு செலவில் எனக்கு செயற்கை கைகளை பொருத்தினால் நன்றியுடையவளாக இருப்பேன்’ என்கிறார் சபா குல்.
ஒரு சிறிய பிரச்னை வாழ்வில் ஏற்பட்டால் பலர் தற்கொலையை நாடுவதை தொலைக் காட்சியில் தினமும் பார்க்கிறோம். தனது இரு கைகளையும் இழந்த நிலையிலும் மனம் தளராமல் உழைக்கும் இந்த பெண்ணிடம் நமக்கு கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது.
தகவல் உதவிமில்லி கெஜட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *