(சுங்கப் பணிப்பாளராக, சம்சுதீன் நியாஸ்ப பதவி உயர்வு)
சுங்க இலாகாவில் பிரதிப் பணிப்பாளராக பதவி வகித்துவந்த சம்சுதீன் நியாஸ் இன்று முதல் (13.02.2019) சுங்கப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்
1983 ம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப் பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சுங்க அதிகாரியாக நியமனம் பெற்ற இவர் , அதன் பின் படிப்படியாக முன்னேறி தற்போது பணிப்பாளராக உயர்வு பெற்றுள்ளார் .
தனது ஆரம்பக் கல்வியை அல்முனீரா வித்தியாலயத்திலும் , அதன் பின்னர் சிறிதுகாலம் அடடாளைச்சேனை மகாவித்தியாலயத்திலும் (தற்போதைய தேசிய கல்லூரி ) கல்விகற்று பின்னர் தனது தந்தையுடன் யாழ்ப்பாணம் சென்று ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புவரை யாழ் / தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்விகற்றார் .
முன்னைநாள் கல்விப் பணிப்பாளரும், அட்டாளை சேனை பிரதேசத்தின் முதல் பட்டதாரியும் ,கல்வியின் முன்னோடியுமாக போற்றப் பட்ட மர்ஹூம் சம்சுதீன் BSc இன் கனிஷ்ட புதல்வரான இவர் , சட்டமானி (LLB ), சட்ட முதுமானி (LLM ) ஆகியவற்றில் சிறப்பு பட்டங்களை பெற்ற ஒரு சட்டத்தரணியுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது .