(மீண்டும் டொலருக்கு நிகராக இலங்கை ரூபா வீழ்ச்சி !!)
180 ரூபாவில் இருந்து 175 ரூபாவரை டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி வலுப்பெற்ற
நிலையில் மீண்டும் 180 ரூபா மட்டத்தினை நேற்று எட்டியது.
கடந்த ஆறு மாதங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி அடைந்த நிலையில் கடந்த ஓரிரு வாரங்களாக சற்று வலுப்பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய மத்திய வங்கி நாணயமாற்று விகிதப்படி டொலருக்கு நிகரான இலங்கை நாணயம் மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.