• Sat. Oct 11th, 2025

சோமாலியாவில் 20,000 குழந்தைகள் இறக்கும் அபாயம்

Byadmin

Jun 29, 2017

கடுமையான வறட்சி காரணமாக சோமாலியாவில் குறைந்தது 20,000 குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒரு முக்கிய தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேவ் தி சில்ரன் (Save the Children) அமைப்பு, இரண்டு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், ஒன்பது மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது.

உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்க சர்வதேச சமூகத்தை சேவ் தி சில்ட்ரன் கோரியுள்ளது.

நாட்டில் கடுமையான வறட்சியின் காரணமாக தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் முகமை தெரிவித்த அடுத்த சில தினங்களில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. (BBC)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *