(இந்திய விமானியை சிறைபிடித்த பாகிஸ்தான்)
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய – பாகிஸ்தான் மோதல் உக்கிரம் அடைந்துள்ளது.
நேற்று இந்தியா, போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று இரு இந்திய விமானங்களை நாங்கள்தான் சுட்டு வீழ்த்தினோம். ஒரு வீரரை பிடித்துவைத்துள்ளோம்” என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.