• Sat. Oct 11th, 2025

மழை பெய்யாவிடின் மின் வெட்டும் நேரம் தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்

Byadmin

Mar 27, 2019

(மழை பெய்யாவிடின் மின் வெட்டும் நேரம் தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும்)

மே மாத இறுதிக்குள் போதியளவு மழை கிடைக்காவிடில், மின்சார துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென, மின்சார பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் போதியளவு மழை கிடைக்கப்பெறாவிடின் மின்சார உற்பத்தியில் பாரியளவில் நெருக்கடியை சந்திக்க நேரிடுமெனத் தெரிவித்துள்ளதுடன், அவசர மின்சார கொள்வனவுக்கு மின்சக்தி அமைச்சால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி மின்துண்டிப்பு செய்யப்படும் கால அவகாசத்தை தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *