• Sat. Oct 11th, 2025

பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல்… எத்தனை கோடி மதிப்பு ..?

Byadmin

Mar 27, 2019

(பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல்… எத்தனை கோடி மதிப்பு ..?)

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து, கூடுதல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

தோண்ட தோண்ட புதையல் கிடைத்துக்கொண்டே இருந்தது. இதில் ஒட்டுமொத்தமாக, ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும், பல தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் புதையலின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *