தம்புள்ள ரஜமகா விகாரையின் நிதி தொடர்பில் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறிய கருத்தை தொடர்ந்து அவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டில் எந்த ஒரு விகாரையிலும் அரசாங்கம் மாத்திரம் அல்ல வேறு எவரையும் கை வைக்க விட மாட்டேன் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அகில விராஜ் தம்புள்ளை குறித்த விகாரைக்கு கிடைக்கும் நிதி கணக்காய்வு செய்யப்பட்ட வேண்டும் எனவும் அந்த நிதி நிர்வாகத்தை அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும், அதற்கெதிராக அஸ்கிரிய பீடமும் குறித்த விகாரை நிர்வாகமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது விஜேதாச ராஜபக்சவும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.