• Sat. Oct 11th, 2025

ஹிரோஷிமா அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி கொண்ட வெடிப்பு எது தெரியுமா?

Byadmin

Jun 30, 2017

செர்பியா நாட்டின் டுங்குஸ்கா கிராமத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய எரிகல் தான் 1000 மடங்கு சக்தி கொண்ட அந்த வெடிப்பு என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1908ம் ஆண்டு ஜூன் 30ம் திகதி காலை 7 மணியளவில் சோவியத் ரஷ்யாவின் கிராமமான டுங்குஸ்காவில் (தற்போது இந்த கிராமம் செர்பியாவில் உள்ளது) பெரும் சத்தத்துடன் வானில் இருந்து ஒரு பொருள் விழுந்து வெடித்துச் சிதறியது.

வெடித்துச் சிதறிய பொருள் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், அது எரிகல் என்பது தெரியவந்தது.

விண்வெளியில் சுற்றிவரும் எரிகற்கள் பூமியில் நுழையும்பொழுது, வளிமண்டலத்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறிவிடும். ஆனால், டுங்குஸ்கா பகுதியில் நடந்ததோ அரிதிலும், அரிதான சம்பவம். வளிமண்டல உராய்வினால் தீப்பிழம்பாக மாறிய எரிகல், பயங்கர சத்தத்துடன் டுங்குஸ்கா நதிக்கரையோரத்தில் விழுந்தது.

இதனால், அந்த பகுதியில் இருந்த மான்கள் உள்ளிட்ட விலங்குகள் கொல்லப்பட்டதுடன், மரங்கள் அனைத்தும் தீயில் கருகின. எரிகல் விழுந்த இடத்திலிருந்து சுமார் 2,150 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகள் அதன் பாதிப்பை உணர்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த எரிகல்லில் இருந்து 100 டன்னுக்கும் மேற்பட்ட டிஎன்டி வெடிபொருட்கள் சிதறின. இது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு வெளிப்படுத்திய ஆற்றலை விட ஆயிரம் மடங்கு கூடுதலாகும்.

எரிகற்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்த நிகழ்வு டுங்குஸ்கா வெடிப்பு என்றழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை நினைவு கூறும் விதமாகவும், எரிகற்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 30ம் திகதி சர்வதேச எரிகற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் எரிகற்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. சர்வதேச எரிகற்கள் தினத்தை ஒட்டி, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *