• Sun. Oct 12th, 2025

மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்

Byadmin

Apr 21, 2019

(மஹிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடைக்கு விஜயம்)

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பு  உட்பட   ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள  குண்டு வெடிப்பு   சம்பவம்  வன்மையான   கண்டிக்கத்தக்கது.  

புனிதமான  தேவாலயங்களை  மையப்படுத்தி வன்முறை  சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையானது  கொடூரமான   நினைவுகளை  மீள் திருப்பியுள்ளன.   தேசிய   பாதுகாப்பிற்கு  பாரிய  அச்சுறுத்தல் இதனூடாக ஏற்பட்டுள்ளன.   

இந்நிலையில் அனைத்து மக்களும் பொறுப்புடனும்,   ஒத்துழைப்புடனும்  செயற்பட வேண்டும்.  இக்கட்டான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும்,   பாதுகாப்பு   நடவடிக்கைகளுக்கும்  அனைவரும் ஒன்றினைந்து   செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மற்றும் பிரச்ச ரணதுங்க ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *