• Sat. Apr 4th, 2026

பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்_ நாமல்

Byadmin

Apr 21, 2019

(பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்_ நாமல்)

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவருக்கும் அணி திரள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் இன்றைய தினம் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக இறைவனை பிரார்த்தனை செய்தாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *