• Sat. Oct 11th, 2025

லவங்கப்பட்டை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…?

Byadmin

May 20, 2019

(லவங்கப்பட்டை எதற்கெல்லாம் மருந்தாகிறது தெரியுமா…?)

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள்  நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது  பயன்படும்.தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து, கால்சியம், போஸ்பேட், க்ளோரின்,  பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின், பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும். அதே போல  இலவங்கப்பட்டையிலும் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை இருக்கிறது.  தயாரிப்பு முறை: ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை தண்ணீரில் சேர்க்கலாம் அப்டியே பேஸ்ட் செய்து சாப்பிடலாம் இருதய நோய்: தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். வயது ஆகும்போது நம் இருதயத்தின் தசைகள்  வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.

மூட்டு வலி: மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.  கொலஸ்ட்ரால்: ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு  குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும்  தொந்தரவுகள் குறையும். ஜலதோஷம்: ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து  மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும்  இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *