(கட்டாருக்கு சவூதி அழைப்பு – சல்மானின் கடிதமும், ஹமத் அல் தானிக்கு பறந்தது)
இம்மாதம் 30ம் திகதி மக்கா நகரில் இடம்பெற இருக்கும் வளைகுடா கூட்டுறவு கவுன்சிலின் அவசர உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுதியிடம் இருந்து கையெழுத்துக் கடிதம் ஒன்றை கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று -27- பெற்றுக்கொண்டார்.
முன்னதாக இந்த அவசர கூட்டத்திற்கு கட்டார் அழைக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சவூதியின் மீது தொடர்ச்சியாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சி படையினால் சவூதி இலக்கு வைக்கப்பட்டு ஏவுகனைத் தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதும் கவனிக்கத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம்களது பொருளாதாரத்தைக் குறி வைத்து தாக்கும் இத் தருணத்தில் கட்டார் போன்ற நாடுகளின் அடைக்கலம் இன்றி அமையாததொன்றாகும்.
கட்டார் மீதான தடைகள் நீக்கப்பட்டால் பாரியளவான வேலைவாய்ப்புகள் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
வளைகுடா நாடுகளில் முருகல் முடிவுக்கு வருமா! பிரார்த்தனை செய்வோம் இன்சா அல்லாஹ்.