• Sat. Oct 11th, 2025

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி

Byadmin

Jun 20, 2019

(கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம் -பிரமிப்பூட்டும் காட்சி)

ஆஸ்திரேலியாவின் மிர்ட்டில்போர்ட் பகுதியில் கடந்த 11ம் தேதி பவுல் மெக்கல்லி என்பவர் வரப்பு அருகே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த அவர் சற்று வானை பார்த்தார். அப்போது திடீரென ஆழ்கடல் வானில் கூடியது போன்ற அரிய காட்சி தென்பட்டுள்ளது. காரில் இருந்தபடியே இதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

வானில் மேகங்கள் தண்ணீரைப் போல காட்சி அளித்துள்ளது. இது குறித்து பவுல் கூறுகையில், ‘கடல் அலைகள் வேறு கோணத்தில் வானில் செல்வதுப் போன்று காட்சி அளித்தது. இதனை பார்த்து வியந்தேன். உடனடியாக காரை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன்’ என கூறியுள்ளார். இதேபோல் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் மேகங்கள் கடல் அலையைப் போல் மோதுகின்ற அரிய வீடியோ தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த மேகங்களின் தன்மை குறித்து 2017ம் ஆண்டு வரை கணிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படம் காண்போரை பிரமிப்படையச் செய்துள்ளது. மேகக் கூட்டங்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து வரும்போது பல்வேறு கோணத்தில் பயணிக்கும். காற்றின் திசைக்கேற்ப மேகங்கள் கூடும். இதனால் இதுப்போன்று அரிய மற்றும் ஆச்சரியமூட்டும் வகையில் இயற்கையாக மேகங்கள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *