• Sun. Oct 12th, 2025

உம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்

Byadmin

Sep 9, 2019

(உம்ராவுக்கான புதிய நடைமுறை அறிமுகம்)

ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டுக்கான முதலாவது உம்ரா விசா சற்று நேரத்தின் முன்னர் வெளியாகியுள்ளது .2019ஆம் ஆண்டு ஹஜ் இற்கு பின்னர் இலங்கைக்கான முதலாவது உம்ரா விசா தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களைப் போல் அல்லாது உம்ராவுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் இவ்வருடம் பல புதிய சட்டதிட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

“கடந்த வருடங்களைப் போல் அல்லாது சவுதி அரேபிய அரசாங்கம் இவ்வருடம் பல புதிய சட்டதிட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

அதில் ஒன்று தான் சவூதி அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான லைசென்ஸ் பெறப்பட்ட ஹோட்டல்களில் தான் ஹாஜிமார்கள் தங்க வைக்கப்படவேண்டும்.

அவைகள் நட்சத்திர தரத்திலான ஒட்டல்களாக இருக்க வேண்டும். குறித்த ஹோட்டல்களின் விலைகள் ஒப்பீட்டளவில் கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.

சாதாரணமான நட்சத்திர ஓட்டல்கள் ஹரத்தில் இருந்து 850 மீட்டர்கள் அல்லது 1 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஹோட்டல் அமையப்பெற்றுள்ளதால் அந்த ஹோட்டல்களில் இருந்து ஹரத்துக்கு பஸ் வண்டிகளில் தான் வரவேண்டும் என்பதால் மேலதிக பஸ் கட்டணங்களும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஹரத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டல்களில் பெரும்பான்மையானவைகளுக்கு அனுமதி லைசென்ஸ் வழங்கப்படாததன் காரணமாக சற்று தொலைவில் உள்ள ஹோட்டல்களை பதிவு செய்ய வேண்டிய நிலைமயும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் விசாவுடைய கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை.சிறுவர்களும் முழு ஹாஜியாகவே கணிக்கப்பட உள்ளனர்.

அதேபோல போக்குவருத்திற்காக சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து மாத்திரமே பெறவேண்டும் என்ற நடைமுறை சவுதி அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த 1441 வரக்கூடிய இந்த முஹர்ரம் மாதத்திலிருந்து செல்லக்கூடிய உம்ரா பயணிகள் முன்னரை விட பெரும் தொகையை கொடுக்க வேண்டிய ஒரு நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் குறைந்த கட்டணமாக 95000 ரூபாய், ஒரு லட்சம் ரூபாய், ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் பெற்ற பல நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இந்த குறைந்த கட்டணங்களில் செய்வதன் மூலமாக பல நஷ்டங்களையும் பல கஷ்டங்களையும் பல நெருக்கடிகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.

இனிவரும் காலங்களில் சவுதி அரேபியா அரசாங்கத்தினுடைய இந்த விதிமுறைகளின் படி உம்ராவுடைய கட்டணங்கள் கூடுதலான கட்டணங்களாக அமையப்போகின்றது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சில உம்ரா நிறுவனங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி 12 ஆம் திகதிகளில் முதலாவது குழுக்களை அழைத்துக்கொண்டு மக்கா புறப்படுகிறார்கள். அவர்களும் கூடுதலான கட்டணங்கள் செலுத்தியே குழுக்களாக செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் எதிர்வரும் காலங்களில் உம்ரா உடைய கட்டணங்கள் அதிகரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

எவ்வாறு ஹஜ்ஜுக்கு ஹாஜிகள் செல்கிறார்களோ அதே போல உம்ராவின் விதிமுறைகளும் மாற்றப்பட்டு வருகின்றது என்ற செய்தி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விடயமாகமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *