(ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை)
ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, சோதனைக்காக உடற்பாகங்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.