• Sat. Oct 11th, 2025

“உங்களுக்கு சீட்­டி­ழுப்பில் பெருந்­தொகை பரிசு வீழ்ந்­துள்­ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.

Byadmin

Sep 30, 2019

(“உங்களுக்கு சீட்­டி­ழுப்பில் பெருந்­தொகை பரிசு வீழ்ந்­துள்­ளது” என்ற மெசேஜை நம்பி 5 இலட்சம் ரூபாவை ஏமாந்த நபர்.)

சீட்­டி­ழுப்பில் பெருந்­தொகை பரிசு வீழ்ந்­துள்­ள­தாகத் தெரி­வித்து ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 5 இலட்சம் ரூபா பணம்
மோசடி செய்­யப்­பட்ட சம்­பவம் வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட காவத்­த­மு­னையில் இடம்­பெற்­றுள்­ளது.

வட்ஸ்அப் மற்றும் ஈமெ­யி­லுக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்த தக­வலை உண்மை என நம்­பியே ஒருவர் இவ்­வாறு தனது பணத்தை இழந்­துள்ளார்.

ஹோட்­டலில் தொழில் செய்யும் காவத்­த­மு­னையைச் சேர்ந்த குறித்த இளை­ஞரின் கைத்­தொ­லை­பேசி வட்ஸ்­அப்­பிலும் அவ­ரது மின்­னஞ்­ச­லுக்கும் (ஈமெயில்) சிலரால் தகவல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதில் குறித்த இளை­ஞ­ருக்கு சர்­வ­தேச சீட்­டி­ழுப்பு மூல­மாக பெருந்­தொகை பரிசுப் பொருட்கள் கிடைத்­துள்­ள­தா­கவும் அதனை நாட்­டுக்குக் கொண்டு வரு­வ­தற்கு அதி­க­மான பணம் செல­விட வேண்­டி­யி­ருப்­பதால் ரூபா 5 இலட்சம் செலுத்­து­மாறும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளது.

இதனை நம்­பிய குறித்த இளைஞர், அவர்­களால் தெரி­விக்­கப்­பட்ட வங்கிக் கணக்கில் அவர்கள் கோரிய தொகையை வைப்­பி­லிட்­டுள்ளார். இதன் பின்னர் குறித்த நபர்­க­ளு­ட­னான தொடர்­புகள் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து சந்தேகமடைந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதனை அறிந்து சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

–மெட்ரோ–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *