(வெடிகுண்டு புரளி.. வதந்திகளை நம்பவேண்டாம்)
மட்டக்குளி – கம்பஹா பகுதிகளில் பதற்ற நிலை – வதந்திகளை நம்பவேண்டாமென பொலிஸார் அறிவிப்பு !
மட்டக்குளி ,முகத்துவாரம் மற்றும் கம்பஹா பகுதிகளில் குறிப்பாக மட்டக்குளிய பிரதேச கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் பாடசாலை அருகில் வெடிகுண்டு புரளி ஒன்று பரவியதால் இன்று காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
நேற்று இரவு இயந்திர கோளாறு காரணமாக அங்கு நிறுத்தி வைக்கபட்டு இருந்த கார் ஒன்று நீண்ட நேரமாக காலை வரை இருந்துள்ளது. அதனை அடுத்து அப்பிரதேசத்தை சேர்ந்த சிலர் சந்தேகம் கொண்டு அது பற்றி பரப்பிய தகவல்கள் வதந்தியாக மாறியதே இந்த பதற்ற நிலைக்கு காரணமென கூறும் பொலிஸார் வதந்திகளை நம்பவேண்டாமென மக்களை கேட்டுள்ளனர்.