• Fri. Nov 28th, 2025

“மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர்” – ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்

Byadmin

Oct 17, 2019

(“மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர்” – ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்)

மஹிந்தவிடமிருந்து முஸ்லிம்களை சர்வதேசத்தினரே பிரித்தனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மஹிந்த ஆட்சியில் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால், மஹிந்தவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய சர்வதேசத்தினர், மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தார்கள். இதனாலேயே நரி தந்திரம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க போன்ற ஒருவரை பிரதமராக நியமித்தார்கள். இந்த சூழ்ச்சியினால், இன்று நாடே சிதைவடைந்துள்ளது. இதனையிட்டு, நாம் மிகவும் கவலையடைகிறோம். 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்து விட்டார்கள். இதனால்தான் அரசாங்கம் ஸ்தீரத்தன்மையை இழந்துள்ளது. இந்த அரசாங்கத்தால் மக்கள் அனைவரும் இன்று அச்சத்துடன் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டுக்கு இன்று மஹிந்த – கோட்டா தலைமையிலான அரசாங்கம் ஒன்றுதான் அவசியம் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *