• Sat. Apr 4th, 2026

“கோட்டாபய தலைமையின் கீழ் முஸ்லிம்ளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” – பசில் ராஜபக்ச

Byadmin

Oct 23, 2019

(“கோட்டாபய தலைமையின் கீழ் முஸ்லிம்ளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்” – பசில் ராஜபக்ச)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையின் கீழ் அனைத்து முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வர்த்தகம் ஆகியவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் முஸ்லிம் மக்களை மறந்து விட்டு நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் இணைக்கக் கூடிய இனம் முஸ்லிம்கள் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *