(சஜித் ஜனாதிபதியானாலும், நானே பிரதமராக நீடிப்பேன் – ரணில் திட்டவட்டமாக அறிவிப்பு )
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றாலும் தாமே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச புதிய பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சிலவேளை அவர் ஜனாதிபதியானால் – ரணிலை இனி பிரதமராக நியமிக்க போவதில்லையென்றும் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ரணிலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடனான மிலேனியம் செலென்ஜ் ஒப்பந்தம் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுமெனவும் ரணில் இங்கு அறிவித்தார் .