எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பாரிய சூழல் மாசடைவை ஏற்படுத்தும் என சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் நைற்றிக் அமிலம் 25 டொன் உற்பட 1487 கொள்கலன் இருந்துள்ளதாகவும் அந்த கப்பலில் இருந்த மொத்த பொருட்களில் நிறை சுமார் 74000 டொன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்த ரசாயணங்கள் கடலில் கலப்பதால் பாரிய சூழல் மாசடைவை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ள அதேவேளை கடலில் மிதந்துவரும் ரசாயணங்களை மக்கள் தொடக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் இருந்த அமிலங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் தீப்பிடித்து மேகத்துடன் கலந்து அமில மழையாக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.