• Mon. Apr 6th, 2026

இலங்கையில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பான விபரம்

Byadmin

Jun 2, 2021

நாட்டில் நேற்றைய தினத்தில் (01) மாத்திரம் 57,706 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை 797,205 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்றைய தினம்1,272 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இதுவரை 348,582 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்றைய தினம் 17,368 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 44,189 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *