யணத்தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று 21ஆம் திகதி முதல் 22,23 திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.