இலங்கையில் வௌவால்களுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைகழகம் மற்றும் ஜெர்மன் ரொபர்ட்கோ பரிசோதனை நிறுவனம் இணைந்து நடத்திய பரிசோதனைகளில் இந்த விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 395 வௌவால்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 33 மாதிரிகளில் இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பரவும் சார்ஸ் 2 வைரஸ் வகையை சேர்ந்த அல்பா மற்றும் பீட்டா திரிபுகள் அல்ல என கூறப்பட்டுள்ளது.