ஜூட் சமந்த
வென்னப்புவ- போலவத்த பிரதேசத்திலுள்ள பரலோக ராஜ்ய தேவாலய வளாகத்திலிருந்துமிகவும் பழமையான மயானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேவாலய வளாகதத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டடமொன்றுக்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதே, இந்த மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து 3 அடி ஆழத்தில், கொன்கிறீட்டுகளால் தயாரிக்கப்பட்ட யாரோ ஒருவருடைய புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டு, இது தொடர்பில் தேவாலயத்தின் பங்கு தந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலய வளாகத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைப்பது சாதாரண விடயம் என்றாலும் இதற்காக தேவாலய வளாகத்தில் தனியான இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தேவாலய வளாகத்தில் அவ்வாறு எவரும் தமக்கு தெரிந்த வரையில் புதைக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், இது மிகவும் பழமையான புதைகுழியாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
எனவே இது தொடர்பான ஆராயுமாறு, தேவாலய பங்குத் தந்தையால் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.