ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வகுக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் பொது மக்களின் அதிகபட்சமான பங்களிப்பை உறுதி செய்வதற்கான சாத்தியமான உத்திகளை வகுக்கும் நிகழ்வுகள் வார இறுதியில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றன.
கல்வி, வேலை வாய்ப்பு, சுத்தமான நீர், சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு போன்ற இந்த இலக்குகள் சமூகத்தின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்தவையாகும் என்று அவர் விளக்கினார்.
எனவே இந்த திட்டங்களை செயற்படுத்துவதற்கான உச்ச கீழ் நிலை அணுகுமுறைகளைத் தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொது மக்களின் முன்னுரிமைகள் மற்றும் அபிலாஷைகளின் அடிப்படையில் திட்;டங்கள் அமைவதை உறுதி செய்தல் ஆகியன இதில் மிகவும் முக்கியமானவையாகும்.
அரசியல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு மட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட இந்த ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.