• Mon. Apr 6th, 2026

திட்டமிடப்பட்ட மின்வெட்டு இன்று முதல்

Byadmin

Jan 12, 2022

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு மணித்தியால திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாடு முழுவதும் ஒவ்வொரு வலயமாக ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

வலய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படக் கூடிய காலம் மற்றும் இடங்கள் தொடர்பான விபரங்களை மின்சார சபையினால் நேற்று முன்தினம் வெளியிட்டது.

நேற்றைய தினம் மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை உறுதியளித்த போதிலும் நாட்டில் பல பகுதிகளில் மின்வெட்டு சம்பவங்களின் மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி நுகேகொட, பொரலஸ்கமுவ, கல்கிசை, இரத்மலானை, மாலபே, வத்தளை போன்ற பிரதேசங்களில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேசிய மின்கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கும் தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே மின் தடைக்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட மின்வெட்டு தொடர்பான அட்டவணைக்கு இங்கே அழுத்தவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *