உலகளாவிய பொருளாதாரம் ஒரு கடுமையான கண்ணோட்டத்தை எதிர்கொள்கிறது என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
2021 ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்த உலகளாவிய வளர்ச்சி இந்த ஆண்டு 4.1 சதவீதமாக குறைந்துள்ளது. கொவிட், ஓமிக்ரோன் மற்றும் டெல்டா போன்ற வைரஸ் பரவல் இதற்கான முக்கிய காரணமாகும் என அவர் கூறினார்.
வைரஸ் அச்சுறுத்தல்கள், உணவு மற்றும் எரிசக்தி போன்ற பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதால் ஏழை நாடுகள் அதிகமாக பாதிக்கபடுகின்றன.
அத்துடன் உலக அளவில் பணவீக்கம் 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக அதிக விகிதத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது இது ஒரு மோசமான கண்ணோட்டம் என அவர் தெரிவித்தார்.
மேலும் வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தியானது கொவிட் தாக்குவதற்கு முன்பு இருந்ததை விட 4% சதவீதத்திற்கும் குறைவாக காணப்படுகிறது.
மேலும் அவர் உலகப் பணவீக்கத்தை உந்துவிற்கும் பணக்கார நாடுகளின் ஊக்கத் திட்டங்களைக் குற்றம் சாட்டினார்.
இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.3 சதவீதத்திலிருந்து 8.7சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.