• Mon. Apr 6th, 2026

மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்

Byadmin

Jan 22, 2022

மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதீ துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகிய இருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டிருந்தார்.

இதற்கமைய, கடந்த நான்கு நாட்களில் மட்டும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *