• Sat. Apr 4th, 2026

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன – இம்ரான்கான் இடையிலான கலந்துரையாடல்

Byadmin

Jan 26, 2022

– அஷ்ரப் ஏ சமத் / ஜெ.அனோஜன்பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றைமேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் அந் நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கும், இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தவும், மேலும் விரிவான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் அமைச்சர் பந்துலவிடம் இதன்போது வலியுறுத்தினார்.

மேலும் பௌத்த சுற்றுலாவுக்காக பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டில் இடம் ஒதுக்கியுள்ளதாகவும், அதன்படி இலங்கையிலுள்ள பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் பாக்கிஸ்தானியா்கள் இலங்கையிலும் இலங்கையா் பாக்கிஸ்தானில் முதலிடுதல் மருந்துப் பொருட்கள் உணவுப் பொருட்களை பாக்கிஸ்தானிடமிருந்து இறக்குமதி செய்தல் போன்ற வா்த்தக நடவடிக்கைகள் குறித்தும் பாக்கிஸ்தான் பிரதமர் கலாநிதி பந்துல குணவா்த்தனவிடம் கலந்துரையாடினாா்.
இதன்போது தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த பந்துல குணவர்தன, வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக இலங்கை வர்த்தகர்கள் குழுவுடன் பாகிஸ்தானுக்கு வருகை தந்த தமக்கும் தனது தூதுக்குழுவினருக்கும் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தானும், பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் தூதுக்குழுவினரும் எதிர்பார்த்துள்ளோம்.
பல முயற்சிகள் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கையின் பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் வர்த்தகர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *