• Sat. Oct 11th, 2025

ஆண், பெண் மூளையின் வித்தியாசம்…. உளவியல் சொல்லும் காரணம்…

Byadmin

Feb 6, 2022

உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உளவியல் சொல்லும் காரணம்.

பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த 3 மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து கொஞ்சம் ‘வளவள’ என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று கிடையாது. அதனால்தான் பெண்ணுக்கு காட்சிகளால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இதுபோன்ற அடிப்படையான வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *