• Wed. Oct 15th, 2025

இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள கார்… 12 இலட்சம் ரூபா விலையில் விரைவில் சந்தைக்கு

Byadmin

Feb 8, 2022

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம்உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம்  ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் எனவும், 200 cc  திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 814 கிலோ எடையை சுமந்து செல்லும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் குறித்த கார் சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *