• Tue. Oct 14th, 2025

அரசாங்கத்திற்கு பிரான்ஸ் பாராட்டு

Byadmin

Oct 14, 2025

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் JVP செயலாளர் டில்வின் சில்வா இடையிலான சந்திப்பு இன்று (13) பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள தலைமை அலுவலத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை முதன்மையாகக் கொண்ட NPP அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் குறித்தும் பிரான்ஸ் தூதுவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அதுபோல, இலங்கைக்குள் தேர்தலின் பின்னர் வன்முறைகள் நிலவாமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரியப்படுத்திய தூதுவர் ரெமி லெம்பர்ட்,  திசைகாட்டி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடம் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், ஊழல் மோசடித் தடுப்பு மற்றும் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பல் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் தூதுவர் பாராட்டினார்.இதன்போது,  டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஊழல் மோசடியை தடுப்பதற்கும் நிதி வீண்விரயத்தை குறைப்பதற்கும் நிறைவடைந்த காலப்பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரத்தை வலிமைப்பெற செய்விப்பதற்கும், அதை நிலையாக வைத்துக்கொள்வதற்குமான நோக்கத்துடன் தாம் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.இலங்கையுடன் தொடர்புகளை பேணும்போது ஒருபோதும் திரைமறைவு நிகழ்ச்சி நிரல் இருக்காது என்றும், எதிர்காலத்தில் அரச தலைவர்கள் பிரான்ஸில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் இதன்போது அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *