• Tue. Oct 14th, 2025

அழிவுக்கு ரணில், சஜித், அநுரவே பொறுப்பேற்க வேண்டும்.

Byadmin

Feb 7, 2022

கடந்த ஐந்து வருடங்களில்செய்யப்பட்ட அழிவுகளுக்கு அநுர, ரணில், சஜித் ஆகியோர்பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த விவசாய அமைச்சர்மஹிந்தானந்த அளுத்கமகே,அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசியல்வாதிஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்றும் தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் (05)பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயேமேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்தஅமைச்சர்,
கொரோனா வரும் போது ரணிலும் மைத்திரியும் இருந்தால் என்ன? என்றுகேட்கின்றனர் அவர்கள் இருந்திருந்தால்கடவுள் தான் காப்பாற்றியிருக்க வேண்டும்என்றார்.
ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலானசண்டையில் இறந்தவர்களை வீதியில்தான் புதைத்திருக்க வேண்டும் என்றும்தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவினால்பாராளுமன்றத்தில் சம்பந்தனுக்குஎதிர்க்கட்சித் தலைமையும், அனுரவுக்குஎதிர்க்கட்சியின் பிரதம கொரடா பதவியும்வழங்கப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்கு 4 எம்.பி.க்கள் இருந்ததாகவும் தங்களிடம் 58 பேர் இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷவுக்குஎதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா நெருக்கடியுடன் கடந்தஇரண்டு ஆண்டுகளில் நாங்கள் சிலபணிகளைச் செய்துள்ளோம் என்றும்குறிப்பிட்டார்.

தொற்றுநோய் காரணமாக இலங்கை வெளிநாட்டு வருவாயின் பல வழிகளைஇழந்துள்ளது, இதில் சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்து வரும் பணம் ஆகியவைஅடங்கும் என்றார்.

இவ்வாறான விடயங்களினால்அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைஎதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர்தெரிவித்தார்.

அரிசி விலை அதிகம், எரிவாயு கிடைப்பதுகடினம், பால்மா தட்டுப்பாடு, மக்கள்வாழ்வது சிரமம் என்பதை நாம் அறியாமல்இல்லை என்று தெரிவித்த அவர், சமுர்த்திபெறுவோருக்கு 240 பில்லியன் ரூபாயும்,அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள்,படையினர் ஆகியோருக்கு 5,000 ரூபாய்ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *