• Wed. Jun 10th, 2026

இலங்கையின் தேசிய பேட்மிண்டன் வீராங்கனை 27 ஆவது வயதில் காலமானார்.

Byadmin

Feb 10, 2022

இலங்கையின் முன்னாள் தேசிய பேட்மிண்டன் வீராங்கனை ஓஷடி குருப்பு தனது 27 ஆவது வயதில் காலமானார்.

ஓஷடிக்கு 2020 ஆம் ஆண்டு இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, பின்னர் இரண்டு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் செவ்வாய்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.
கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான அவர், சிறுவயதிலிருந்தே பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கியதுடன், 2015 ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் போட்டியிடவும் செய்தார்.
அதுமட்டுமின்றி 2016 ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 2017 ஆம் ஆண்டு சம்மர் யுனிவர்சியேட் ஆகியவற்றிலும் ஓஷடி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *