இந்தியா- இஸ்ரேல் இடை யே தூதரக உறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு 3 நாள், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து இஸ்ரேல் சென்ற அவர் தலைநகர் டெல்அவிவ்ல் நகரில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் தரை இறங்கினார். அங்கு அவரை வழக்கத்துக்கு மாறாக மரபுகளை மீறி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விமான நிலையத்துக்கே நேரடியாக வந்து உற்சாகமாக வரவேற்றார் அவருடன் மந்திரிகளும் வந்து வரவேற்பு அளித்தனர்.
அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தை விட்டு இறங்கிய மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கட்டித்தழுவி வரவேற்றார்.
பின்னர் அவர் பேசுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள், இந்திய பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம். எனது நண்பரை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
அவரது வரவேற்புக்கு பிரதமர் மோடியும் நன்றி தெரித்தார். எனது இப்பயணத்தின் மூலம் நமது இருநாடுகளின் சமூகமும், உறவும் வலிமை அடையும் நமது உறவுகளில் அந்த வானம் கூட நமக்கு எல்லை இல்லை என்றார்.
மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் ஜெருசலேமில் உள்ள தனது வீட்டில் இன்று விருந்து அளிக்கிறார். அப்போது இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் சந்திப்பு நடக்கிறது. அதன் பின்னர் அங்கு வாழும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் இஸ்ரேல் தொழில் அதிபர்களை மோடி சந்திக்கிறார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
நேற்று நடந்த சந்திப்பின் போது தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்தும் திட்டத்துக்காக ரூ. 260 கோடி வழங்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு அறிவித்தார்.