இரண்டாயிரம் மில்லியன் ரூபாயை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழயர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அத தெரண செய்திச் சேவைக்கு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
நன்றி – அத தெரண