• Wed. Jun 10th, 2026

கொழும்பின் பல பகுதிகளில் 36 மணிநேர நீர்வெட்டு

Byadmin

Feb 18, 2022

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) காலை 10 மணி முதல் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (18) காலை 10 மணி முதல் நாளை (19) இரவு 10 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 01, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 08 மற்றும் 11 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *