• Tue. Oct 14th, 2025

உக்ரேனில் உள்ள (27) இலங்கையர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவிப்பு.

Byadmin

Mar 10, 2022

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பெலருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமல் ஒரு மாத காலத்துக்கு விடுமுறை வழங்குவதற்கு நிர்வாகத்தினர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உக்ரேனில் 81 பேர் உள்ளனர். இவர்களில் 15 பேர் மாணவர்கள் ஏனைய 39 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 27 பேர் அங்கு இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பெலருஸில் 1,561 பேர் இருக்கின்றனர்.இவர்களது நலன்களை மொஸ்கோவிலுள்ள எமது தூதரங்கம் கவனித்துவருகிறது. இவர்கள் விரும்பும் பட்சத்தில் ரஷ்யாவிற்குள் பிரவேசிப்பதற்கு விசாவிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூதரங்கம் நடவடிக்கை க்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *