• Sun. Oct 12th, 2025

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும் காபி பவுடர் பேஸ் பேக்

Byadmin

Apr 13, 2022

தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உரித்து நீக்கும்.

முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? காபியை இப்படி யூஸ் பண்ணுங்க! காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும். இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உரித்து நீக்கும்.

* இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும்.

* பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விடவும்.

* காபி பவுடர்,  சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவுபெறும்.

* காபி பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.

* கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து  ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *