பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதியின் நடவடிக்கையில் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இல்லை. அதனால் ஜனாதிபதிக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்திருக்கின்றோம்.
எனவே ஜனாதிபதி்க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவாக விவாதத்துக்கு எடுத்து வாக்களிப்புக்கு விடவேண்டும். அதன் மூலம் ஜனாதிபதியுடன் இருப்பவர்கள் யார், நாட்டு மக்களுடன் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.